Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டு ராசிபலன் 2024: விருச்சிகம் ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

Advertiesment
Viruchikam
, வியாழன், 28 டிசம்பர் 2023 (08:49 IST)
எடுத்த வேலையை கனகச்சிதமாக முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.



இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப் பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை  கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்கு மாதலால் சமாதானமுறையில் பேசிச் சமாளிக்க வேண்டியது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும்.

வியாபாரி கள் இரட்டிப்பு லாபம் காணவும் வாய்ப்புண்டு. வில்லங்கம் ஏதும் உருவாகாது. தொழில் சிறப்படையும். தொழிலில், வியாபாரத்தில், விவசாயத்தில் எதிராளியின் தொல்லை காணாமல் போகும். வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர்க்க முடியாமற் போகலாம். எனினும் அதை சமாளிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.

அரசியல்வாதிகள் பாராட்டுப் பெறுவார்கள். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். மிகவும் நெருக்கடியான உருவானாலும் அதை எச்சரிக்கையுடன் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பலவிதமான சங்கடங்கள் தோன்றினாலும் உண்மைத் தொண்டர்களின் உதவியுடன் அதை சமாளிப்பீர்கள்.

கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். தொழிலில் ஏற்றமும், தொழிலாளர்களுக்கு சந்தோஷமும் உண்டாகும். கற்றறிந்த வல்லுநர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடை இருக்காது. விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் உழைப்பு அறியப்படும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்படலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட இட முண்டு. குறுக்குவழியில் ஈடுபடாதீர்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுவதில் குறியாயிருங்கள். தெய்வ சிந்தனையோடு இருங்கள்.

மாணவர்களுக்கு சோதனை மிகுந்து காணப்படும் நேரம் ஆதலால் பொறுமையுடன் இருங்கள். பெரியோர் ஆலோசனையின்படி நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் தொல்லை குறையும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த ஆண்டு கடன் தொல்லை தீரும். முன்விரோதம் காரணமாக இருந்துவந்த சில சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். உடல் நலம் முன்னேற்றமடையும். பொதுவாகச் சங்கடங்கள் பல ஏற்படுமானாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல் சீராக இருக்கும். குடும்ப நலனில் அக் கறை செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டு. பொறுமையுடன் நடந்து கொண்டு, சமாளிக்க வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் பணிபுரியும்போது கவனமாக இருப்பது அவசியம்.

 
அனுஷம்:
இந்த ஆண்டு நற்பலன்களும், தீய பலன்களும் கலந்தவாறு இருந்துவரும். இருந்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே தொல்லைகளின் தன்மை இருந்து வரும். மனம் தான் சற்று சஞ்சலத்துக்கு உட்பட நேரும். தெய்வப்பணிகளில் ஈடுபட்டு மனோதிடம் பெறமுயலுங்கள்.அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் அவப் பெயரிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். சாமர்த்தியமாக அவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட இடமில்லை.

கேட்டை:
இந்த ஆண்டு நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாகச் சில சங்கடங்கள் இருக்கும். பெரிய மனதோடும் தெய்வபக்தியோடும் இருந்து அவற்றைச் சமாளிக்கவும். மனத்தை மட்டும் தளரவிடாதீர்கள், அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை இருக்காது என்றாலும் ஒருவிதமான பீதி இருந்து வரும். சாமர்த்தியமாக நடந்து கொண்டால் அரசியல்வாதிகள் அவமானப் படக்கூடிய நிலையிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சச்சரவுக்கு இடம் அளிக்காதீர்கள். வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. செய்யும் தொழிலில் சிக்கல் வராது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம்தேவை.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

சிறப்பு பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும். 

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீஅம்பிகாயை நம:”.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டு ராசிபலன் 2024: துலாம் ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?