Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

Advertiesment
செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (21:40 IST)
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

 
கிரக நிலை:
ராசியில்  கேது, குரு (வ), சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -   தொழில்  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
 
பலன்:
உங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்தும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.
 
கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்
 
அரசியல்வாதிகள் தொகுதி மக்களை சந்திப்பீர்கள். மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்..
 பெண்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள்.
 
மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
 
மூலம்:
இந்த மாதம் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். 
 
பூராடம்:
இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். . தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.
 
உத்திராடம் 1- ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும்.  
 
பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், ஊதா
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்