விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரக நிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - சுகஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் களத்திர ஸ்தானத்திற்கும், கேது பகவான் ராசிக்கும், மாறுகிறார்.
17-09-2020 அன்று காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-09-2020 அன்று பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-09-2020 அன்று காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இரவு, பகலாக உழைக்க காத்திருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங் கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்
பெண்கள் மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப் படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
விசாகம் 4 - ம் பாதம்:
இந்த மாதம் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.
அனுஷம்:
இந்த மாதம் சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை.
கேட்டை:
இந்த மாதம் தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது சிறப்பு. இக்காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்
அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், சிவப்பு
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13