செழிப்பையும், செல்வத்தையும் தரும் மாதமான செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பஞசம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹு என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
11.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூர்யன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உங்களுக்கு இந்த மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனக்கவலை அகலும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
கார்த்திகை:
இந்த மாதம் விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரலாம். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம்.
ரோகினி:
இந்த மாதம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும்.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம் நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த மனக் கசப்புகள் மாறும். குடும்பச் சடங்குகள், தெய்வ ஆராதனைகள், திருமண வைபவங்கள் நிகழும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23