செழிப்பையும், செல்வத்தையும் தரும் மாதமான செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞசம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹு என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
11.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29.09.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உங்களுக்கு இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.
வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் தேடி வரும். கலைத்துறையினருக்கு நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அஸ்வினி:
இந்த மாதம் பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறி மாறும். தொழிலில் இருந்த மந்த கதி போகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த சிக்கல் நீங்கும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும்.
பரணி:
இந்த மாதம் குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.
கார்த்திகை:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்யம் திருப்தியாக இருக்கும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21