Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

Advertiesment
அக்டோபர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்:  கன்னி
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:37 IST)
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

 
கிரகநிலை:
ராசியில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி, குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகநிலை உள்ளது.
 
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
18ம் தேதி சூர்ய பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23ம் தேதி செவ்வாய் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி புதபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31ம் தேதி சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
 
இந்த மாதம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
 
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.
 
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
 
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.
 
அஸ்தம்:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
 
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். 
 
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்
சந்திராஷ்டம தினங்கள்:  21, 22
அதிர்ஷ்ட தினங்கள்:  6, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்