Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

அக்டோபர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்:  மேஷம்
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:23 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ), செவ்வாய், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, குரு (வ) என கிரகநிலை உள்ளது.
 
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
18ம் தேதி சூர்ய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23ம் தேதி செவ்வாய் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி புதபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
 
இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
 
குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.
 
பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.
 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
 
அஸ்வினி:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பரணி: 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். 
 
பரிகாரம்: ஸ்ரீமகாகணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:  10, 11
அதிர்ஷ்ட தினங்கள்:  25, 26

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெருமாள் கோவிலில் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்யவேண்டும் ஏன்...?