Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

Advertiesment
நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்
, திங்கள், 1 நவம்பர் 2021 (15:02 IST)
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

 
கிரகநிலை:
ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் என கிரக நிலவரம் உள்ளது.
 
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
 
பலன்:
உழைப்பு, செயல்திறன், பேச்சு ஆகியவற்றில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விருச்சிகராசியினரே! இந்த மாதம் பலவகையான யோகத்தை தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வ தில் உற்சாகம் உண்டாகும்.
 
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர் கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்ச லாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
 
குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது.

வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
 
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.
 
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
 
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்