Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

Advertiesment
நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்
, திங்கள், 1 நவம்பர் 2021 (14:54 IST)
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.
 
கிரகமாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
எதிரியின் நிலை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய சிம்மராசியினரே  இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடி யாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். ராசியில் சஞ்சாரம் செய்யும் வக்கிர சனியின் பார்வையில் ரத்தகாரகன் செவ்வாய் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங் களை கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.
 
தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தி யோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது  முன்னேற்றத் துக்கு உதவும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் கள் கோபம்  தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக் கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.
 
பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காக வும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
 
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்