மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராஹு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞசம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றம்:
11-05-2025 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-05-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-05-2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2025 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரின் ஆலோசனைகளைப் பெற தயங்காத தனுசு ராசி அன்பர்களே நீங்கள் நேர்மையாக வாழ வேண்டும் என எண்ணுபவர்கள்.
இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம்.
அரசியல் துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.
மூலம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.
பூராடம்:
கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்:
எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும். எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன்களும் லாபங்களும் கிடைக்கும். ஆனாலும் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26