Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

Advertiesment
Kanni

Prasanth Karthick

, புதன், 30 ஏப்ரல் 2025 (20:10 IST)
மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!

கிரகநிலை:
 ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி, ராஹு - களத்திர  ஸ்தானத்தில்  சுக்ரன்  - அஷ்டம  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  பாக்கிய ஸ்தானத்தில்  குரு, சந்திரன் - லாப  ஸ்தானத்தில்  செவ்வாய் -  அயன சயன போக  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றம்:
11-05-2025 அன்று குரு பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-05-2025 அன்று சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-05-2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2025 அன்று சுக்ர பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உழைப்பினை உலகிற்கு பறைசாற்றும் கன்னி ராசியினரே நீங்கள் பதற்றத்தைக் குறைத்து கொள்வது நல்லது.

இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் இருந்து வந்த தடங்கல் நீங்கும். ஆறாமிடத்தில் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும்.

கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும்.

அஸ்தம்:
உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.

சித்திரை 1, 2, பாதம்:
நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும்.

பரிகாரம்: முடிந்தவரை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்:  18, 19


 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!