Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

Advertiesment
ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்
, செவ்வாய், 31 மே 2022 (16:44 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

 
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுகஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டும் வல்லவர்களான நீங்கள் கலகலப்பாகவே பழகினாலும் காரியத்தில் கறாராக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகிய இனங்களில் மராமத்து பணிகள் செய்வதற்கு முன் யோசித்து செய்யவும். தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள். கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். 
 
வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். 
 
பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். 
 
கலைத்துறையை சார்ந்தவர்கள் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுக்கவும். 
 
மாணவர்கள், கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும். படிப்பில் சிறந்த நிலையை அடைய இந்த காலகட்டத்தை பயன்படுத்தவும்.
 
பூரட்டாதி:
இந்த மாதம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.
 
ரேவதி:
இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
 
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 4, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்