Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

Advertiesment
ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்
, செவ்வாய், 31 மே 2022 (16:41 IST)
கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
வாக்குறுதி என்பதி சத்தியத்திற்கு மேலானது என்பதை உணர்ந்து உங்கள் உண்மையான வார்த்தைகளால் இரும்புக் கதவையும் திறக்கும் திறமையுடைய கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த  தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். 
 
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். 
 
தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். 
 
கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். 
 
பெண்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை  கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள்  உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.  திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். 
 
மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய  துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி  நடக்கவும். 
 
அவிட்டம்:
இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும்.
 
ஸதயம்:
இந்த மாதம் உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். குடும்பத்தினரிடம் அமைதியாக செல்லவேண்டும்.
 
பூரட்டாதி:
இந்த மாதம் சந்தாண பாக்கியம் கிட்டும். நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். கலைத்துறையினர் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள்.
 
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 1, 2, 3, 28, 29, 30

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்