Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

Advertiesment
Dhanusu

Prasanth K

, திங்கள், 30 ஜூன் 2025 (16:08 IST)
கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:
02.07.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
03.07.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
17.07.2025  அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.07.2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.07.2025  அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.07.2025  அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய தனுசு ராசியினரே,  இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர் களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும்.

கலைத்துறையினர் நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் ஆகியோர் படப் பிடிப்புகளின் காரணமாக வெளிநாடு சென்று வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரம்  உயரும். மனதில் தெளிவும், நம்பிக்கையும் ஏற்படும்.

அரசியல் துறையினர் சிலருக்கு மனதில் கவலைகள் ஏற்படக்கூடும். அதற்கு முக்கிய காரணம் மன உளைச்சலே ஆகும்.  கவலை வேண்டாம் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் வரை நீங்களே வெற்றியாளர்கள். மனதில் புது தைரியம் பிறக்கும்.

பெண்களுக்கு வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது  நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்.

மாணவர்களுக்கு  ஆசிரியர்  சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

மூலம்:
இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

 
பூராடம்:
இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

 
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். சிலர் இடமாற்றமும் அடைய வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: ராகவேந்திரரை தரிசித்து வர மனதில் நிம்மதி பிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 17, 18, ஜூலை 14, 15

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!