Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!

Advertiesment
Thulam

Prasanth K

, திங்கள், 30 ஜூன் 2025 (16:02 IST)
கிரகநிலை:
அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், குரு - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் செவ், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:
02.07.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
03.07.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
17.07.2025  அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.07.2025 அன்று புதன் பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.07.2025  அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.07.2025  அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துலாராசியினரே  இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங் களில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். பங்குதாரர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். தேவையான வங்கிக் கடன்கள் கிடைக்கும்.  

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். பணியாளர்கள் வழியில் எந்த வித பிரச்சனைகளும் வராது.

ஸ்வாதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்து வர வருமானம் பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 09, 10, 11

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!