Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

Advertiesment
டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்
, சனி, 30 நவம்பர் 2019 (18:12 IST)
டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ  -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு, சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அனுபவ ஞானம் அதிகம் உடைய ரிஷப ராசியினரே, இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை   தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்.  பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.

குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.  வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் நினைத்தது நடப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. சிலருக்கு திருமணம் வாய்ப்புகள் சட்டென்று அமைந்து விடும்.  தாமதிக்காமல் நல்ல வாய்ப்புகளை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

ரோகிணி:
இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. தொழில் துறையில் இருந்த தொய்வு நிலை மாறும். வியாபாரிகளுக்கு தேடி வந்து ஆர்டர்கள் கொடுப்பார்கள். பார்ட்னர்களின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாதீர்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்காகத்தான் எதையுமே செய்வார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வீண்பகை உண்டாகலாம். எனவே  கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் நல்ல  முன்னேற்றம் உண்டு. சிலர் உங்கள் மனதை புண்படுத்துவதற்காக சில காரியங்களில் ஈடுபட்டு தோல்வியடைவார்கள். வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு அழைப்புகள் வரலாம். முயற்சி செய்யுங்கள் வெற்றி கிட்டும்.

பரிகாரம்:  தினமும் தாமரை மலர் கொண்டு  மகாலட்சுமியை பூஜியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்