Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-11-2019)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-11-2019)!
, சனி, 30 நவம்பர் 2019 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்: 
இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்: 
இன்று  எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரத்தில் நிறைவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்: 
இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம்: 
இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.
 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சிம்மம்: 
இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி: 
இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது.  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில்  லாபம் கூடும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம்:
இன்று அரசியல் துறையினர் வாக்கு வன்மையால் உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரும். எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தருவதாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

விருச்சிகம்:
இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:
இன்று பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கும்பம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:
இன்று எடுத்த வேலைகளை மிகச்சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீராத கடனை தீர்க்கும் பைரவ ரகசியமும் பரிகராமும்...!!