Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனம் என்பதும் அகந்தையும்

Advertiesment
மனம் என்பதும் அகந்தையும்
, செவ்வாய், 12 ஜூன் 2018 (13:46 IST)
மனம் என்பதும் அகந்தையும் என்பது குறித்து ரமண மகரிஷி கூறியபோது, மனம் எப்போதும் ஒரு தூல வடிவை அனுசரித்து நிற்கும். தனியே நில்லாது. மனமே சூட்சும சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது. நினைத்தல், நிச்சயித்தல் என்பன மனதின் தர்மங்கள். இதுவே இந்திரியங்களுக்குக் கண்போன்ற இடம். இந்திரியங்கள் வெளியே இருப்பதால் "புறக்கரணம்" என்றும், மனம் உள்ளே இருப்பதால் "அகக்கரணம்" என்றும் அறியப்படுகின்றன.


எண்ணங்களின் குவியலே மனம். அகந்தை இல்லாமல் மனம் இருக்க முடியாது. ஆகவே எல்லா எண்ணங்களிலும் அகந்தை இருக்கிறது.
வலிமையாகச் சிந்திக்கும் போதுதான் மனம் வலிமை பெறுகிறது என்பது பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது.

மனம் அலைபாயும் போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதமனம்: என்ன சொல்கிறார் ஜக்கி வாசுதேவ்