கர்நாடக சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ கே.ஜி. போபையா தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுங்கள் என நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது.
இந்நிலையில், தற்காலிக சாபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி. போபையாவை ஆளுநர் வாஜூபாய் வாலா தேர்வு செய்துள்ளார். 2009 முதல் 2013ம் ஆண்டு வரை போபையா சபாநாயகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.