Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (21-11-2023)!

Advertiesment
உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (21-11-2023)!
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (00:43 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேலை பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்:
இன்று அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

மிதுனம்:
இன்று தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். பிரிந்து போன நண்பர்கள் ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் காலகட்டமிது. வாழ்க்கைத்துணையுடன் உறவு பிரகாசிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 

கடகம்:
இன்று தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

சிம்மம்:
இன்று சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 

கன்னி:
இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 

துலாம்:
இன்று உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 

தனுசு:
இன்று பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 

மகரம்:
இன்று பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 

கும்பம்:
இன்று இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 

மீனம்:
இன்று பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதங்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனமுடன் முயற்சிகள் எடுத்துப் படித்தால் வெற்றி உங்களை வந்தடையும். உங்களின் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்