Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (19-11-2023)!

Advertiesment
உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (19-11-2023)!
, ஞாயிறு, 19 நவம்பர் 2023 (07:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6 

ரிஷபம்:
இன்று தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்:
இன்று வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பணி இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வாழ்க்கையில் மற்ற மனிதர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக இழுத்து வந்த ஒரு பிரச்சினை சுமூகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9    

கடகம்:
இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5 

சிம்மம்:
இன்று திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தில் பங்கு போடக் காத்திருப்பார்கள். சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6 

கன்னி:
இன்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:
இன்று உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9 

விருச்சிகம்:
இன்று நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இசையில் உள்ள திறமையை காட்டுவதற்கு மிக சரியான காலகட்டமிது. உங்கள் திறமை பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3 

தனுசு:
இன்று மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். பாராட்டத்தக்க வகையில் எந்த சிறப்பும் இராது என்றாலும் ஓரிரு நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6 

மகரம்:
இன்று வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6 

கும்பம்:
இன்று வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7 

மீனம்:
இன்று பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியமாகிறது. உங்களின் சேமிப்புகளில் கை வைக்க வேண்டி வரலாம். கவனம் தேவை. எனவே அதை முடிந்த வரை தவிர்க்கவும். விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல் கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் நாளை வருடாந்திர புஷ்ப யாகம்: தயார் நிலையில் 7 டன் பூக்கள்