Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-08-2021)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-08-2021)!
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:
இன்று வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களால் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:
இன்று பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டு பயணம் உண்டாகலாம். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். உடல் ஆரோக்யம் பெறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:
இன்று மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் ஏற்படலாம்.  இடமாற்றம் உண்டாகலாம். கன்னிபெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும்.  மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

சிம்மம்:
இன்று  பெரியோகளின் அனுசரனை கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:
இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

துலாம்:
இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய்வது நல்லது. போராட்டங்களை பற்றி கவலைப்படாமல் வெற்றியையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்கள்.  எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணதேவை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

விருச்சிகம்:
இன்று முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு உண்டாகலாம். எனவே கவனமாக பேசுவது நல்லது. முயற்சிகளில் தடை உண்டாகலாம். பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:
இன்று வழக்கு விவகாரங்களை தள்ளிபோடுவது நல்லது. சுபகாரியங்கள் நடைபெறும்.  பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும். காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்:
இன்று வீண் அலைச்சல் எப்போதும் மனசங்கடமும் இருக்கும். எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் பகை வராமலும், உடல் ஆராக்யம் கெடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று தாய்தந்தையின்  உடல்நிலையில் கவனம் தேவை. நலல பலன்கள் கிடைத்தாலும் அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியூர் தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவகிரகங்களின் மூல மந்திரம்!!