Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-08-2021)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-08-2021)!
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6 

ரிஷபம்:
இன்று அரசியல்வாதிகள் பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மிதுனம்:
இன்று எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 

கடகம்:
இன்று மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9

சிம்மம்:
இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3

துலாம்:
இன்று சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். அரசியல் துறையினருக்கு சில நற்பலன்களை ஏற்பட்டாலும் சிறு மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

விருச்சிகம்:
இன்று கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

தனுசு:
இன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

மகரம்:
இன்று உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்:
இன்று துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3 

மீனம்:
இன்று எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-08-2021)!