Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை பாக்கியம் வேண்டுதலால் கிட்டுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

குழந்தை பாக்கியம் வேண்டுதலால் கிட்டுமா?
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (15:23 IST)
குழந்தை வாரிசு வேண்டி தெய்வத்திற்கு பரிகாரங்கள் செய்து குழந்தைப்பேறு பெற்றவர்களைப் பார்க்கிறோம். இதுபோல் வேண்டுதல், பரிகாரங்கள் செய்வதால் குழந்தை பாக்கியம் கிட்டுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

அதாவது ஒரு ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இருந்தால்தான் அது கிட்டும். பரிகாரங்கள் மூலமாக குழந்தை பெறும் ஜாதகங்களும் உண்டு. ஆனால் ஜாதகத்தில் குழந்தை பாக்கியமே இல்லையென்றால் என்னதான் செய்தாலும் கிட்டாது.

சில ஜாதகங்களுக்கு என்ன செய்தாலும் நன்மை அடைய முடியாது. முந்தைய காலத்தில் தர்ம, கர்ம புத்திரன் கிடைப்பான் என்று கூறுவார்கள். அதாவது தர்மம் பண்ணு. உனக்கு கர்மம் பண்ண புத்திரன் இருப்பான் என்பதுதான் இதன் அர்த்தம்.

ஒரு எண்ணத்தோடு காமம் புரிந்து அந்த எண்ணத்திலே யோனி வெற்றி அடைந்து அந்த யோனி பலத்திலேயே பிள்ளைகள் பெற்று வாழ்வது என்பதை தற்போது அறிவியல் ஆராய்சிகள் கூறுகின்றன.

எந்த சிந்தனையுடன் இணைகிறார்களோ, அப்போது அவர்களது மனதில் எந்த சிந்தனை ஓடுகிறதோ அதற்கேற்ற வகையில் பிள்ளைகள் பிறக்கின்றன.

சமீபத்தில் ஒரு பெற்றோர் வந்திருந்தார்கள். அவர்களுடைய குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தக் குழந்தை பாலிவுட் நடிகையைப் போன்று இருந்தாள். அவரிடம், அந்த நடிகையின் பெயரைச் சொல்லி உங்களுக்கு அந்த நடிகையை ரொம்பப் பிடிக்குமா என்று கேட்டதற்கு அவரும் ஆம் என்று பதிலளித்தார்.

அதுபோல் நாம் எதை எண்ணுகிறோமே அதன்படியே நமக்கு அமையும்.

எண்ணம் செயல் வித்து. எண்ணத்தைக் கொடுப்பவன் சந்திரன். மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். அதனை செயல்படுத்தக் கூடியவன் சுக்ரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும். பரிகாரம் செய்வதால் குழந்தை பாக்கியம் உண்டு என்பவர்களுக்கு மட்டுமே குழந்தை கிட்டும். எல்லோருக்கும் பரிகாரங்கள் பலன்தராது.

எந்த தெய்வத்தை நாடினாலும், எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், எந்த விதமான மருத்துவமுறையிலும் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது கிட்டவே கிட்டாது. அதுபோன்ற ஜாதகங்களும் உண்டு.

தர்ம, கர்ம புத்திரன் என்றும், அடுத்து தத்து புத்திரன் என்றும் ஜோதிடம் கூறுகிறது. அதனை அடுத்த முறை பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil