Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா தினகரன்? - தேர்தல் கமிஷன் ஆலோசனை

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா தினகரன்? - தேர்தல் கமிஷன் ஆலோசனை
, திங்கள், 10 ஏப்ரல் 2017 (14:01 IST)
ஆர்.கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் தாராளமாக பணப்பட்டுவாடா செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7ம் தேதி காலை டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி சோதனையை தொடங்கியது வருமான வரித்துறை. 


 

 
முக்கியமாக, தினகரனுக்கு வலதுகரமாக செயல்பட்ட அமைச்சர் விஜயாபாஸ்கர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 
 
இதில் தேர்தலில் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரனை ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
 
அதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வரும் தினகரன், வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்கி வாக்காளர்களை தனக்கு வாக்களுக்குமாறு மிரட்டியும் வருகின்றனர். மேலும் காவல்துறையை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதி இயந்திரத்தின் மூலம் தங்களுக்கு சாதகமாக ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது. எனவே நேரடியாக  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட டிடிவி தினகரனை, உடனடியாக காலம் தாழ்த்தாமல் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 
 
மேலும், தினகரனின் ஆட்கள் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தலைக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுத்த வீடியோ காட்சிகள், பணத்தை வாங்குவதற்காக மக்களிடம் கொடுக்கப்பட்ட டோக்கன்கள், யார் யாருக்கு, யார் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது. எனவே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. 
 
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளர்கள்,  வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. அப்படி செய்தால், இன்னும் 6 வருடத்திற்கு தினகரன் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தன்னை பதவி நீக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஆழந்திருப்பதால், தினகரன் தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தல் ரத்து - இவ்வளவுதானா ஓபிஎஸ் ரியாக்‌ஷன்?