Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்னீர் என்னும் தபால்காரரும் மோடி என்னும் ஜாலக்காரரும்

Advertiesment
பன்னீர் என்னும் தபால்காரரும் மோடி என்னும் ஜாலக்காரரும்
, வியாழன், 19 ஜனவரி 2017 (15:59 IST)
இது வரை தமிழகம் சந்திக்காத புதுமையான களம் மெரீனாவின் களம். தலைவன் இல்லாத ஒரு பெரும் படை களம் கண்டுக்  கொண்டு இருக்கிறது. களத்தில் இருக்கும் ஒவ்வரு வரும்   தளபதிகளே.  கடும் பனியும் வெயிலும் இவர்களை தொட்டுப் பார்த்து சொன்னது இவர்கள் போராளிகள் என்று. இந்த  தன்னெழுச்சிப் போராட்டம் ராணுவத்தையும் தொட்டுப்  பார்க்க ஆசைப்படுகிறது.  



பன்னீர் என்னும் தபால்காரர்

தூங்காதே !  தம்பி தூங்காதே !

நீ தாங்கிய உடையும்  ஆயுதமும் பல சரித்திரக்கதை  சொல்லும்

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்.

உன் போல் குறட்டை விட்டோர்  எல்லாம் கோட்டை விட்டார்.

நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் எல்லாம் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்.

ஓர் படைதனில் தூக்கியவன் வெற்றி இழந்தான்

இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால்  பல பொன்னான பணிகளும் தூங்குத்தப்பா !


என்ற MGR பாடலை திடீர் என்று கேட்ட நம் முதலமைச்சர் மனுவுடன் வழக்கம் போல் தாமதமாக டெல்லி புறப்பட்டார். பிரதமரும் வழக்கம் போல் பெற்றுக் கொண்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன்னால் முடியாது என்று கை விரித்து இருக்கிறார். டெல்லியில் ஜெயலலிதாவிற்கும்  கருணாநிதிக்கும் லாபி செய்ய தரகர்கள் இருந்தார்கள். நம் பன்னீருக்கு அப்படி யாரும் இடைத் தரகர்கள் இல்லை. நம் எம் பி க்கள் எல்லாம் பிரதமரை க்கூட சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மரணம் இவர்களை தூசு ஆக்கி  துரும்பு ஆக்கி  இருக்கிறது.  ஆனால் சசிகலா புஷபவால் மட்டும் ஜனாதிபதியை  சந்திக்க முடிகிறது காரணம் டெல்லி லாபிகள். நம் மேன்மைக்குரிய முதல்வர் ஒரு விலை உயர்ந்த தபால்காரன்  மட்டுமே.

மோடி என்னும் ஜாலக்காரர்

ஜெய் ராம் ரமேஷ் தவறு செய்தார், மேனகா காந்தி தவறு செய்தார், அ தி மு க மற்றும் தி மு க கட்சிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதெல்லாம் பழைய கதை.  மாணவர்களின் கோபம்  அ தி மு க ல் இருந்து பிஜேபி பக்கம் திருப்பி இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்ற பந்து மோடி என்னும் நபரின் கோர்ட்டில் உள்ளது. The Ball is on one and only Modis’ Court. அவர் தன் முன்பு உள்ள கடினமான முடிவுகளை எடுத்து இருக்கிறார்.


மோடியும் அவரின் குருமார்களும்  தங்களால் கால் பதிக்க முடியாத தமிழகத்தை கை கழுவி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த விட்டால் தமிழன் செத்து  விட மாட்டான்.  செத்தாலும் சாகட்டுமே அடுத்த வருடம் பார்த்து கொள்ளலாம் என்று   கை கழுவி இருக்கிறார்கள். இது ஒன்றும் கர்நாடகம் இல்லையே. நாம் மக்களாட்சியின் பண்புகளை ஜனநாயகத்தின் சாவிகளை அதிகாரத்தை பிரதமருக்கு தான் வழங்கி இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திற்கு அல்ல.  மோடி என்னும் ஜாலக்காரரின் ஜாலம் பேசுகிறது. பேசட்டும். அதன் ஆயுள் அற்பம்.


 
webdunia



இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்
சதயபாமா யுனிவர்சிட்டி
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு குடும்பம் இல்லை? - நடராஜன் அதிரடி