Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவுக்கு குடும்பம் இல்லை? - நடராஜன் அதிரடி

Advertiesment
சசிகலாவுக்கு குடும்பம் இல்லை? - நடராஜன் அதிரடி
, வியாழன், 19 ஜனவரி 2017 (15:50 IST)
சசிகலாவுக்கு குடும்பம் இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள்தான் குடும்பம் என்று சசிகலாவின் கணவர் ம. நடராசன் தெரிவித்துள்ளார்.


 

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, ’தமிழகத்தில் குடும்ப அரசியல் செய்பவர்களைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது’ என்று பேசினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தஞ்சையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய, ’நடராஜன் ஜெயலலிதா முதல்வராக பாடுபட்டது நான்தான். எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தது. நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம். நாங்க குடும்ப ஆட்சிதான் பண்ணுவோம். நாங்கதான் ஜெயலலிதாவைக் காப்பாற்றினோம்” என்றார்.

இந்நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடராஜன், “அதிமுகவில் பொதுக் குழுக் கூடி தலைமை ஏற்க வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு வந்தது. அதன் பிறகுதான் அவர் பொதுச் செயலர் பதவியை ஏற்றார். நான், குடும்ப அரசியல் பற்றி பேசியதை சிலர் தவறாகப் பரப்புகின்றனர்.

பெரியார், அண்ணாவுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், அவர்களின் கொள்கைகளை இன்றும் எண்ணற்றவர்கள் பரப்பி வருகின்றனர். அதேபோல, சசிகலாவுக்கும் குழந்தைகள் கிடையாது. சசிகலாவுக்கு அதிமுக தான் குடும்பம். லட்சோப லட்சம் தொண்டர்கள் தான் பிள்ளைகள்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் வீடு முன்பு அன்புமணி தர்ணா போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!