Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"நீங்க அதுக்குதான் லாயக்கு" ட்விட்டரில் கமல் ஹாசனை ரவுண்ட்டு கட்டும் நெட்டிசன்ஸ்!

, வியாழன், 23 மே 2019 (16:16 IST)
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம்  கட்சி தனித்தே களத்தில் இறங்கியது. 
 

 
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கட்சி துவங்கிய கமல்ஹாசன் பலராலும் விமர்சிக்கப்பட்டார். மேலும் நடிக்க வாய்ப்பில்லாத கமல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என கடுமையாக விமர்சித்தனர். கமல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்து ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சி அடையவைத்தது. நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கமலின் அரசியல் பிரவேசம் சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், அரசியக்கு வருவேன்.....அரசியலுக்கு வருவேன்... என்று கூறி காலம் கடத்தி கடுப்பேற்றாமல் சட்டென்று முடிவெடுத்து களத்தில் குதித்த கமலை பலரும் பாராட்டினர். 

webdunia

 
மற்றவர்களை போன்றெல்லாம் கமல் ஏனோ...தானோ... என்று அரசியலுக்கு வந்துவிடவில்லை. முடிவில் உறுதியாக இருந்த அவர் தன் அரசியல் பயணத்தை அடி பூமியில் வேரூன்றி நடவேண்டும் என வித்தியாசமான முடிவுகளை எடுத்தார். ஆம்! அந்த வித்தியாசத்தில் ஒன்று தான் "பிக் பாஸ்" விஜய் தொலைக்காட்சி கமலிடம் நிகழ்ச்சியை தொகுத்த வழங்க சொல்லி கோடிகளை கொட்டிக்கொடுத்து கோரிக்கை வைத்தது. இதனை சூசகமாக புரிந்துகொண்ட கமல் பிக் பாஸ் மேடையிலேயே தன் அரசியல் ஆட்டத்தை ஆடி மக்களிடம் தன் கருத்துக்களை மிக எளியதாக கொண்டுபோய் சேர்த்தார்.

webdunia

 
பிறகு தமிழகத்தின் இருபெரும் துருவங்களாக திகழ்ந்த அதிமுக , திமுக கட்சிகளுக்கு எதிராக மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கி சர்ச்சை நாயகனாக பேசப்பட்டார். 
 
ஆனால் தேர்தல் முடிவின் பிரதிபலிப்பாக லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது மக்கள் நீதிமயம். ஆம்..! வயதில் மூத்த பல முன்னனி காட்சிகளை விட ஓராண்டு குட்டி குழந்தையான மக்கள் நீதிமயம், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று மார்தட்டிய அமமுக, தங்களை விட வயதில் மூத்த நாம் தமிழர் ஆகியோரைவிடவும், பல தொகுதிகளில் கமல் கட்சி அதிக வாக்குகளை பெற்று பழம் தின்று கொட்டை போட்டு, களத்தில் நிறைய நிர்வாகிகளை உருவாக்கிய , திமுக, அதிமுகவுக்கு அடுத்த மநீம 3வது இடம் என்பது அசாத்தியமான உண்மை. 

webdunia

 
ஆனால் ட்விட்டர்வாசிகளில் ஒருவர்  "நாடாளுமன்ற தேர்தலே நடக்காத மாதிரியும், அதுல மநீம போட்டியிடாத மாதிரியும், மொத்தமா டெபாசிட் இழந்தது தெரியாத மாதிரியும். விஜய் டிவில பிக்பாஸ் ஷோ பன்னுவாப்ல இந்த கமல்ஹாசன். நீங்க அதுக்குதான் லாயக்கு கமல் சார் என்று கடுமையாக விமர்சித்து கொச்சைப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்ணை கவ்விய பாஜக: வாஷ் அவுட் ஆன ஸ்டார் வேட்பாளர்கள்!