Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக கூட்டணி கட்சிகள் மட்டும் பங்கேற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம்...

திமுக கூட்டணி கட்சிகள் மட்டும் பங்கேற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம்...

திமுக கூட்டணி கட்சிகள் மட்டும் பங்கேற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம்...
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (12:32 IST)
திமுக அழைப்பு விடுத்த அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பெரும்பாலான முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. மாறாக, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளன.


 

 
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. மேலும், நடுவர் மன்றம் தீர்ப்பை அமுல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
எனவே, அனைத்து கட்சிகளும் இணைந்து, இதுகுறித்து நேரில் பிரதமரை வலியுறுத்த, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், இன்று நடைபெற்ற அக்கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது என்று தமிழிசை சவுந்தரராஜன் முன்பே கூறிவிட்டார். அதிமுக கலந்து கொள்ளாது என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் நலக் கூட்டணியில் இருந்த வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரிடையே மாறுபட்ட கருத்து இருந்தது. பரிசீலிப்போம் என்றார் திருமா. கலந்து கொள்ள மாட்டோம் என்றார் வைகோ. இறுதியில், எங்களால் மநகூ-ல் பிளவு வந்து விடக்கூடாது. எனவே விசி கட்சி கலந்து கொள்ளாது என்று திருமா கூறிவிட்டார். மேலும், பாமக, தேமுதிக, இடது சாரி கட்சிகள் அனைத்தும் இக்கூட்டத்தை புறக்கணித்தன. 
 
இறுதியில், முக்கிய எதிர்கட்சிகள் எதுவும் இல்லாமல், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
 
இந்த கூட்டத்தில் திமுக உட்பட மொத்தம் 16 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோ வர இருக்கும் நடிகர் விஜய்: அப்போ அஜித்; இப்போ விஜய்!