அப்பல்லோ வர இருக்கும் நடிகர் விஜய்: அப்போ அஜித்; இப்போ விஜய்!
அப்பல்லோ வர இருக்கும் நடிகர் விஜய்: அப்போ அஜித்; இப்போ விஜய்!
முதல்வர் ஜெயலலிதா ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் அப்பல்லோ வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் அப்பல்லோ வந்து முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடத்ததும் அவர் வருவார் என செய்திகள் வருகின்றன.
பைரவா படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்ல இருக்கும் விஜய், அதற்கு முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என விரும்புவதாகவும், அவரது உடல்நிலை குறித்து முக்கியமான சிலருக்கு போன் செய்து விசாரித்ததாகவும், அனுமதி கிடைத்தவுடன் முதல்வரை பார்க்க இருப்பதாகவும் செய்தி வருகிறது.
இதற்கு முன்னர் நடிகர் அஜித் தான் அடுத்த முதலமைச்சர் எனவும், கட்சியையும், ஆட்சியையும் நீங்கள் தான் பார்த்துக்கனும்னு ஜெயலலிதா கூறியதாக வதந்தி பரவியது. அந்த செய்தி ஆங்கில செய்தி இணையதளங்களில் கூட வெளிவந்தது.
தற்போது முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நடிகர் விஜய் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.