வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயல் எதிர்வரும் 25ம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.