கரூர் தொகுதி முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தோடு, அவரது தோழி சசிகலாவின் புகைப்படங்களையும் அ.தி.மு.க-வினர் ஏராளமான இடங்களில் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கரூர் அதிமுகவினர் அப்பகுதியில் ஊர்வலம் சென்றனர். அப்போது, சின்னம்மா என்று அதிமுகவினர் அழைக்கும் சசிகலா பேனர்களையும், அதோடு ஜெயலலிதா படங்களையும் எடுத்தனர்.
ஆனால், அந்த பகுதியில் அதற்கு முன்னரே ஒட்டியிருந்த சசிகலா, ஜெயலலிதா போஸ்டர்களை கரூர் தொகுதி முழுக்க கிழிக்கப்பட்டிருந்தது.
கரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் அருகிலும், கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகம் முன்பும் சசிகலாவின் போஸ்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால், யார் சேதப்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில அதிமுகவினர் இதை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆனால், அரவக்குறிச்சி தொகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலா போஸ்டர்கள் எந்த வித சேதப்படுத்தபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்