Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ விளாசல்!

சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ விளாசல்!

Advertiesment
சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ விளாசல்!
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:40 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என அதிமுக கடைகோடி தொண்டன் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் விரும்புவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர் சிலர்.


 
 
இந்த மாய பிம்பத்தை உடைக்கும் விதமாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 1977 முதல் 1984 வரை எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ கே.சவுந்திரராஜன் தான் அவர்.
 
webdunia
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.
 
மேலும் அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள். இவர்களுக்கு கட்சி மீது அக்கறையில்லை. பதவி கிடைத்துவிட்டது அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அதைவைத்து கொள்ளையடிக்க வேண்டும். அதற்காக அம்மாவுக்குப் பிறகு சசிகலா என்கிறார்கள் அவர்கள் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாட்ஜில் தங்கும் பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பிய நபர்