அம்மாவை காட்டு ; கழகத்தை கைப்பற்ற நினைக்காதே : கொந்தளித்த அதிமுகவினர்
அம்மாவை காட்டு ; கழகத்தை கைப்பற்ற நினைக்காதே : கொந்தளித்த அதிமுகவினர்
Publish Date: Sat, 01 Oct 2016 (16:02 IST)
Updated Date: Sat, 01 Oct 2016 (16:05 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் நலமுடன் இருப்பதாக அவ்வப்போது, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது. அவருக்கு சுவாச பிரச்சனை இருப்பதாகவும், இதனால் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தற்போது மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் அதிமுக தொண்டர்கள் பதட்டமான நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடியுள்ளனர். தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடிக்கடி அங்கு வந்த உள்ளம் உள்ளனர்.
ஒருபக்கம், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிமுகவினர் மறுத்தாலும், முதல்வரின் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை காட்டு.. அவருக்கு மட்டுமே நாங்கள் அடிமை.. கட்சியை கைப்பற்ற நினைக்காதே என்கிற ரீதியில் வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒன்று தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.