Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல்

Advertiesment
இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல்
, ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (19:47 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.


 

 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதனால் தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையில் இருந்து தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 3 ஆம் தேதி. மனு மீதான பரிசீலனை 4 ஆம் தேதி, வேட்புமனு திரும்பபெறுதலுக்கான கடைசி தேதி 6 ஆம் தேதி.
 
17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளம்பரத்திற்காகவா எல்லாம் வெளுத்தது அம்மா பேரவை செயலாளர் எஸ்.காமராஜூன் முகத்திரை