Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளம்பரத்திற்காகவா எல்லாம் வெளுத்தது அம்மா பேரவை செயலாளர் எஸ்.காமராஜூன் முகத்திரை

Advertiesment
ஜெயலலிதா
, ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (19:22 IST)
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் வீடு திரும்ப வேண்டி விஷேச பூஜைகள் அதுவும் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை பின்புறம் வைத்து விட்டு சாமி கும்பிட்ட நிகழ்ச்சி அனைவருக்கும் அதிருப்தி அளித்தது.


 


தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல், உலகெங்கும் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் ஆங்காங்கே பிராத்தனைகள், விஷேச யாகங்கள், பூரண ஆயுள் ஹோமங்கள் உள்ளிட்டவைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த மூன்று நாட்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளில் மற்றும் கோவில்களில் விஷேச யாகங்களும், பிராத்தனைகளும், தொழுகைகளும் நடைபெற்று வருகின்றனர்.

கரூர் நகர அ.தி.மு.க சார்பிலும் மூன்றாவது நாளாக பல்வேறு கோயில்களில் விஷேச யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ தனக்கு சீட்டு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அடிக்கடி கட்சி நிகழ்ச்சிகளில் காட்டுவதோடு, ஒவ்வொரு கூட்டத்தையும் புறக்கணித்தார்.

ஆனால் மூன்றாவது நாளாக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் வீடு திரும்ப வேண்டி விஷேச பூஜைகள் அதுவும் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை பின்புறம் வைத்து விட்டு சாமி கும்பிட்ட நிகழ்ச்சி அனைவருக்கும் அதிருப்தி அளித்தது.

உண்மையான அ.தி.மு.க வினர்., மேலும் கரூர் மஹா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்திலும், பூஜையிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டதோடு, பூஜை செய்வதற்கு மூல காரணமான அம்மாவின் புகைப்படம் அனைவரின் பின்னால் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அம்மா பேரவை செயலாளர் எஸ்.காமராஜ் எடுத்து கொண்டார். இந்த சம்பவம் அ.தி.மு.க வினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருப்பார்: அப்பல்லோ மருத்துவர்கள் பேட்டி