Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Mahendran
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (17:59 IST)
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம். சில பக்தர்கள் காவடி எடுத்து வருவதும் நடைமுறையாக உள்ளது. பத்து நாட்கள் பாதயாத்திரையாக பயணத்தை தொடங்கும் பக்தர்கள், முருகனுக்கு வேல் காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக் கடனை முடித்ததும், மீண்டும் நடந்தே தங்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம்.
 
இந்த நிலையில், வரும் 11ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாட இருக்கின்ற நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, பழனி அடிவாரத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கோவிலில் தைப்பூசம்: பூஜை நேரங்கள் மாற்றம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், ஸ்தலங்கள் செல்வது சால சிறந்தது! - இன்றைய ராசி பலன்கள் (02.02.2025)!

11 பெருமாள்கள் ஒருசேர எழுந்தருளிய கருடசேவை உற்சவம்: திருநாங்கூரில் திருவிழா..!

இந்த ராசிக்காரர்கள் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் ஆலோசிப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (01.02.2025)!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை!

அடுத்த கட்டுரையில்
Show comments