Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் பவன முக்தாசனம்

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் பவன முக்தாசனம்

Advertiesment
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் பவன முக்தாசனம்
ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக நம் முன்னோர்களால் நமக்கு  சொல்லப்பட்டுள்ள ஆசனம் பவன முக்தாசனம். வாயு விடுவிப்பு ஆசனம் என்று இன்னொரு பெயரும் உண்டு.
 
என்பதே இந்த ஆசனத்தின் குறிப்பாகும். அடிவயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றுவதால் அந்தபெயர். 
 
ஆசனமுறை:
தரையில் அமர்ந்து முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பக்கவாட்டில் கைகள் நீட்டியிருக்க உள்ளங்கைகள் கீழ் நோக்கி, புறங்கைகள் மேலே இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.


 

 
பிறகு மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவும். மூச்சுக்காற்றை வெளியே விடும்போது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி  மடித்து வயிற்றின் மீது கொண்டுவரவும். கைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால் முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடு‌க்கவு‌ம்.
 
தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதனை ஒவ்வொரு கால்களாகவும் செய்யலாம்.
 
சாதாரண மூச்சில் 15வினாடிகள் இருந்து விட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். மூன்று முறை செய்து விட்டு இயல்பு நிலைக்கு வரவேண்டும்.
 
உடல் ரீதியான பலன்கள்:
அல்சர், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். மூட்டுவலி நீங்கும். மாரடைப்பு நோய், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.
 
கவனிக்கவேண்டியவை:
கடைசி ஐந்து முதுகுத்தண்டுவட எலும்புகளின் இறுதியில் சேகரம் என்ற பெரிய எலும்பு உள்ளது. அந்த சேகரத்தின் மேல் கடைசி எலும்பு அழுத்தி விட்டால் வலி மிகக்கடுமையாக இருக்கும். முதலில் சாதாரண மூச்சில் செய்து பழகவும். வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுக்கவும்.
 
தவிர்க்க வேண்டியவர்கள்:
கழுத்துவலி மற்றும் முதுகெலும்பு பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்வதை அறவே தவிர்க்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து தப்பலாம் : ஆய்வில் தகவல்