Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுவருடத்தில் நுழைந்த இந்தியா மற்றும் நாடுகள்! – அமைதியான முறையில் கொண்டாடிய மக்கள்!

Advertiesment
புதுவருடத்தில் நுழைந்த இந்தியா மற்றும் நாடுகள்! – அமைதியான முறையில் கொண்டாடிய மக்கள்!
, சனி, 1 ஜனவரி 2022 (08:36 IST)
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டு பிறந்த நிலையில் மக்கள் அதை அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.

உலகம் முழுவதும் புது ஆண்டிற்குள் நுழைந்துள்ள நிலையில் உலக மக்கள் புது ஆண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். அதேசமயம் உலக நாடுகள் பலவற்றில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதுடன், கடற்கரைகளில் கூடவும் தடை விதிக்கப்பட்டது.

அதேசமயம் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தேவாலயங்களில் புத்தாண்டில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 2021 போல அல்லாது 2022 சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என பலரும் மற்றவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் உயருகிறது ஏடிஎம் கட்டணம்! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!