Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மைகளின் தலையை வெட்டி எறியும் தாலிபன்கள்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (17:25 IST)
ஆப்கானிஸ்தானிலில் துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தாலிபான் அமைப்பு ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக அனைத்து துறைகளிலும், செயல்பாடுகளிலும் கடும் கட்டுப்பாடுகளை தாலிபான் விதித்து வருகிறது.
 
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு தாலிபான் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
 
இது குறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, ‘மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
 
அவர்கள் தலையை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments