Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்: சுட்டுக்கொன்ற மாமியார்!

மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்: சுட்டுக்கொன்ற மாமியார்!

Advertiesment
மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்: சுட்டுக்கொன்ற மாமியார்!
, திங்கள், 5 ஜூன் 2017 (10:58 IST)
பாகிஸ்தானின் பெஷாவரில் ஒரு பெண்ணை தானது மாமனாரே பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் மாமியார் இந்த செயலில் ஈடுபட்ட தனது கணவரை சுட்டுக்கொன்றுள்ளார்.


 
 
பெஷாவரில் உள்ள கைபர் பக்துன்குவா ஷங்லா என்ற கிராமத்தில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் திருமணமாகியுள்ளது. இதனையடுத்தி திருமணமான பின்னர் மனைவியை தனது பெற்றோர்கள் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார்.
 
ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அந்த பெண்ணின் மாமனார் அவரை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை அந்த பெண் தனது கணவரிடம் கூற அவர் பெற்றோர்கள் என்பதால் அவர்களை ஏதும் செய்யவில்லை.
 
ஆனால் தனது தாயிடம் விடுமுறைக்கு பின்னர் தாங்கள் தனிக்குடித்தனம் செல்ல இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து மூன்று மாதத்திற்கு பின்னர் அந்த பெண் தனது மாமியாரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவரது மாமியார் தூங்கிக்கொண்டிருந்த தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.
 
இதனையடுத்து பெஷாவர் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர், குடும்ப உறவுகளையும், அதன் புனிதத்தையும் மதிக்க தெரியாத தனது கணவரை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சில்க்ஸ் அருகே உணவகத்தில் மீண்டும் தீ விபத்து!