Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழும் குழந்தைக்கு பொம்மையைக் காட்டி சமாதானம் செய்த நாய் - வீடியோ

அழும் குழந்தைக்கு பொம்மையைக் காட்டி சமாதானம் செய்த நாய் - வீடியோ
, திங்கள், 21 ஜூலை 2014 (16:23 IST)
தொட்டிலில் விளையாடிய குழந்தையிடம் இருந்து பொம்மையை எடுத்துச் சென்ற நாய், குழந்தையின் அழுகையை நிறுத்த அனைத்து பொம்மைகளையும் கொண்டு வந்து சமாதானப்படுத்தும் வீடியோ இணையத்தில் பிரபலமாகியுள்ளது. 
 
இங்கிலாந்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று தொட்டிலில் படுத்தபடி அதன்மேல் கட்டப்பட்டிருந்த பொம்மையை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. அங்கு வந்த நாய் பொம்மையை எடுத்துச் சென்றது. இதனால் அழத் துவங்கிய குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு 'சார்லி' என்னும் அந்த நாய் அனைத்து பொம்மைகளையும் கொண்டு வந்து சமாதானப்படுத்தும் வீடியோ யூ டியூப் இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளது. 
 
தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் முகம் மறையும் அளவிற்கு பொம்மைகளைக் கொண்டு வரும் சார்லியின் செய்கை மக்களைக் கவர்ந்துள்ளது. 

நன்றி -  You tube  

Share this Story:

Follow Webdunia tamil