Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி நீக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு: டிரம்ப் பதவி பறிபோகுமா?

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (08:05 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
 
இந்த வாக்கெடுப்பில் தனது பதவியை டிரம்ப் காப்பாற்றி கொள்வாரா? அல்லது பதவியிழப்பாரா? என்ற கேள்வி அமெரிக்க குடிமக்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடன் எதிர்பார்ப்பாக உள்ளது 
 
இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இந்த இரண்டிலும் டிரம்ப் தோல்வி அடைந்தால் அவர் தனது பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபருடன் இணைந்து தனக்கு சாதகமான பல சட்டங்களை இயற்றியதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் தான் அவருக்கு எதிரான இந்த தீர்மானம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும்  ஊழியர்களுக்கு தர வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறி விட்டதாகவும் வெளிநாடுகள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று போர் பதட்டத்தை ஏற்படுத்துவதாகவும் டிரம்ப் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பில் மொத்தம் 233 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்கெடுப்பு குறித்த சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி டிரம்ப் நிச்சயமாக தோல்வியடைந்து அவர் பதவியை இழப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வாக்கெடுப்பின் முடிவு வெளி வரும் வரை பொறுமை காப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments