Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”தானோஸாக மாறி சொடக்கு போடும் டிரம்ப்”.. வைரல் வீடியோ

Advertiesment
”தானோஸாக மாறி சொடக்கு போடும் டிரம்ப்”.. வைரல் வீடியோ

Arun Prasath

, வியாழன், 12 டிசம்பர் 2019 (09:53 IST)
ஜனநாயக கட்சியை அச்சுறுத்துவதற்காக டிரம்ப்பை ஹாலிவுட் பட வில்லன் கதாப்பாத்திரமான தானோஸ் போல் சித்தரித்து ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபது ஜோ பிடென் மீது உக்ரைனில் விசாரணை நடத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுத்தாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து டிரம்ப் மீது ஜனநாயக கட்சி பதவி நீக்க விசாரணையை நடத்திவருகிறது.

இந்நிலையில் டிரம்ப்பின் அரசியல் எதிரியான ஜனநாயக கட்சியினரை அச்சுறுத்தும் விதமாக டிரம்பின் பிரசார குழுவான “Trump War Room” ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் டிரம்ப் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வில்லன் ”தானோஸ்” போல் சித்தரித்துள்ளார்கள். அத்திரைப்படத்தில் தானோஸ்  ”இன்ஃபினிட்டி” எனப்படும் கற்களுடைய கையுறையை அணிந்து சொடக்கு போட்டவுடன் உலகத்தின் பாதி ஜனத்தொகை அழிந்துவிடும்.

அது போல் அந்த வீடியோவில் தானோஸாக டிரம்ப்பை சித்தரித்துள்ளார்கள். டிரம்ப் சொடக்கு போட்டவுடன் ஜனநாயக கட்சியினர் விசாரணை ஒன்றும் இல்லாமல் ஆவது போல் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார் கமல்”.. விளாசும் அதிமுக நாளிதழ்