Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்தல.. பத்தல! 8 கணவர்கள்; 11 குழந்தைகள்! யாரும்மா நீங்க?

Advertiesment
பத்தல.. பத்தல! 8 கணவர்கள்; 11 குழந்தைகள்! யாரும்மா நீங்க?
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (14:05 IST)
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 8 ஆண்களுடன் உறவுக் கொண்டு 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பாக பல நாடுகளும் விழிப்புணர்வு நடத்தி குழந்தை பெறுதலை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிஹாய். இவருக்கு நிறைய குழந்தைகள் பெற்றெடுத்து வளர்க்க ஆசையாம். இதற்காக இதுவரை 8 ஆண்களுடன் உறவுக் கொண்ட இவர் 11 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். இவரது இந்த செயலுக்கு பலரும் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.


அதற்கு அவர் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். இப்போது இதில் மூவர் இல்லையென்றாலும் கூட எனது குழந்தைகளுக்கு 5 தந்தைகள் இருப்பார்கள் என கூறியுள்ளாராம். இதுமட்டுமல்லாமல் வரும் காலத்தில் மேலும் பல குழந்தைகளை பெற்றுக் கொள்ள விருப்பம் இருப்பதாகவும், அதற்கு தயாராகி வருவதாகவும் சொல்லி அதிர்ச்சியை அளித்துள்ளாராம் பிஹாய்.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!