Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுக்க ட்ரம்ப் நடவடிக்கையே எடுக்கல! – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:19 IST)
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அதிபர் ட்ரம்ப் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு இருந்து வரும் நிலையில் அமெரிக்கா அதிகமான பாதிப்புகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. உலக அளவிலான பாதிப்புகள் 2 கோடியை நெருங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க செய்து ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவை தடுக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மொத்தமாக நடத்தப்பட்ட சர்வேயில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ட்ரம்ப் அரசாங்கம் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் ஜார்ஜ் ப்ளாயிட் கொலை வழக்கிலும் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments