Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் எகிறி அடித்த சுனாமி: 44 பேர் படுகாயம்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (14:21 IST)
சீனாவிலுள்ள ஒரு வாட்டர் பார்க்கில், உருவாக்கப்பட்ட செயற்கை அலை, பேரலையாக உருவெடுத்ததில் 44 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஷூயுன் வாட்டர் பார்க்கில், மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது, அந்த குளத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது, இயந்திரம் மூலமாக செயற்கையான அலையை உருவாக்குவார்கள். இந்நிலையில் ஷுயுன் வாட்டர் பார்க்கில் இன்று செயற்கை அலை உருவாக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறால், சுனாமி போல் ஒரு பேரலை எழுந்துள்ளது.

10 அடிக்கு எழுந்த இந்த பேரலையில், நீச்சல் குளத்தில் குளித்துகொண்டிருந்த மக்கள் பலரும் அடித்து வீசப் பட்டார்கள். இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்தனர். எனினும் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது.

ஷூயுன் வாட்டர் பார்க்கில் ஏற்பட்ட இந்த பேரலையை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments