Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ எச்சரித்தாலும் அடங்காத ட்ரம்ப்! – நான்தான் வென்றேன் என தொடர் வாதம்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (10:59 IST)
அமெரிக்க தேர்தலில் தோற்றுவிட்ட நிலையிலும் தேர்தல் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், அமெரிக்க தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் தொடர்ந்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சர்ச்சைக்குரிய வகையில் அவர் இட்ட பதிவுகளை நீக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம் அவரை எச்சரித்தும் உள்ளது. அந்த எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாத ட்ரம்ப் தற்போது “நான் தேர்தலில் வென்றேன்” என மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் டிவீட்கள் அமெரிக்காவில் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அதே சமயம் பிடன் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர்களிடையே மோதல் நிகழ்வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments