Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

Advertiesment
20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

Prasanth Karthick

, வியாழன், 30 ஜனவரி 2025 (10:30 IST)

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்குள் வந்த வெளிநாட்டினர் மட்டுமல்லாமல், உள்நாட்டு மக்களே பெரும் பிரச்சினைகளை சந்திக்க தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், பதவியேற்றது முதலே கடுமையான பல முடிவுகளை எடுத்து வருகிறார். பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது, வெளிநாட்டினர் அமெரிக்காவில் நுழைவதற்கான கெடுபிடிகளை அதிகப்படுத்தியது என அடுத்தடுத்து பல நடவடிக்கைகள் பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்நிலையில் அமெரிக்க அரசு ஊழியர்களையே 20 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அரசு துறைகளில் அதிகமான நபர்கள் பணிபுரிவதால் அவர்களில் 20 லட்சம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ள ட்ரம்ப், இதுதொடர்பாக ஊழியர்களுக்கு இமெயிலும் அனுப்பியுள்ளார். அதில் தாமாக பணியிலிருந்து விலகும் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் அளிக்கப்படும் என சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!