Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழைகளுக்கு உயர்பதவியில் இடம் கிடையாது. டிரம்ப் சர்ச்சை கருத்து

Advertiesment
, வெள்ளி, 23 ஜூன் 2017 (04:03 IST)
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரிடம் இருந்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.



 


அந்த நிலையில் தற்போது அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து என்னவெனில், 'பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்பதவிகளில் இடம் உண்டு என்றும், ஏழைகளுக்கு அதுபோன்ற பதவியை அளிக்க எனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து அமெரிக்காவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு பதவியை ஒருவரிடம் ஒப்படைக்கும் முன் அவர் அந்த பதவிக்கு தகுதியானவர்தானா, அனுபவம் உள்ளவரா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் ஏழையா? பணக்காரரா? என்று பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று டிரம்புக்கு சமூக வலைத்தளங்களில் அமெரிக்கர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் கருத்து கூறிய டிரம்ப், அமெரிக்காவின் 'பொருளாதார செயலர் பதவியில் மிகவும் பணக்காரரான வில்பர் ரோஸ் என்பவரை நியமித்தற்கு காரணவர் அவர் பணக்காரர் என்பதுதான் அதேபோல் பொருளாதாரத்துறை ஆலோசகராக இருக்கும் கேரி கோன் அவர்களும் பணக்காரர்தான். இந்த பதவிகளில் இருப்பவர்கள் நிறையை விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். என்பதால் நான் பணக்காரர்களை நியமிக்கின்றேன்.

ஆனால் நான் அனைத்து மக்களையும் நேசிக்கவே செய்கிறேன். அவர்கள் பணக்காரராக இருந்தாலும் சரி; ஏழையாக இருந்தாலும் சரி. ஆனால், உயர் பதவிகளில் ஏழைகளில் இருப்பதை நான் விரும்பவில்லை.” என்றும் அவர் திட்டவட்டமாகக் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோர் டெலிவரியில் 4G சிம். மளிகைக்கடையை விட மோசமாகிவிட்டதே!